From பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமம், இலங்கை

Featured

நுண்நிதி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொருளாதார நீதிக்கான பெண்ணியக் குழுமத்தின் அழைப்பு

17 அக்டோபர் 2025 தேசிய மக்கள் சக்தி கட்சியானது (NPP) தனது ஆட்சியின் முதல் ஆண்டினை அண்மையில் நிறைவு செய்தது. இதில் கவலைக்கிடமான விடயம் என்னவெனில் இந்த புதிய அரசாங்கமானது களத்தில் உள்ள யதார்த்த நிலைகளுடனான தொடர்பினை  ஏற்கனவே இழந்துவிட்டது என்பதாகும். கூட்டணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான  JVP இன் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள், “இலங்கையில் யாரும் பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை” என சமீபத்தில் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆளும்…

Featured

மன்னாரின் பறவைகள், நிலம் மற்றும் மக்களுக்கு ஆதரவாக நிற்கின்றோம் – பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமம், இலங்கை

பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமமான நாம் மன்னாரின் பறவைகள், நிலம் மற்றும் மக்களின் அழுகுரல்களைச் செவிமடுக்கின்றோம். மன்னாரில் அமைதியான விதத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது 2025 செப்டம்பர் 26ஆம் திகதி இரவு நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலுடன் இந்த அரசாங்கத்தின் இருண்ட நாட்களில் ஒன்று கடந்துவிட்டிருக்கின்றது. இதன் விளைவாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்படி நேரிட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தின் மக்கள் பல ஆண்டுகளாக தமது பலவீனமான சுற்றுச்சூழல்…