இடதுசாரி மாற்று வேலைத்திட்டம்

‘ஒரு புதிய சுதந்திரப் போராட்டம்: புதிய நவதாராளவாத மற்றும் நவகாலனித்துவத்திலிருந்து தப்பிக்க ஒரு அமைப்பு ரீதியான மாற்றம்!’ என்ற தலைப்பில் ஒரு இடதுசாரி வேலைத்திட்டம் 2024 மார்ச் மாதத்தில் ஐக்கிய இடதுசாரி முன்னணியால் அதன் பொலிட்பீரோவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட வேலைத்திட்டம் அதன் தேசிய அமைப்பாளர் சமீர பெரேராவினால் ‘கத்திகா’விற்கு வழங்கப்பட்டது. அதை நாங்கள் இங்கு வெளியிடுகின்றோம்.

தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய ஆவணத்தை இங்கே பார்க்கவும்:

A left political programme titled ‘A New Freedom Struggle: A ‘System Change’ to Escape Neoliberal Neo-Neo-Colonialism!’ was presented by the United Left Front to its Politburo in March 2024. The program approved by its members has been given to ‘Kathika’ by its national organizer Chameera Perera and we publish it here.

See, the document with Tamil and English summary, and English translation, here:

ஒரு புதிய விடுதலைப் போராட்டம்!

நவதாராளவாதம் மற்றும் நவகாலனித்துவத்தில் இருந்து விடுதலைபெற அமைப்பு ரீதியான மாற்றம்!

தேர்தல் வாக்குறுதிகளைத் தாண்டி ஒரு இடதுசாரி நிகழ்ச்சிநிரல் நோக்கிய நகர்வு

ஐக்கிய இடதுசாரி முன்னணி

மார்ச் 2024

புதிய ஒரு சுதந்திரப் போராட்டம்! புதிய ஒரு இலங்கைக்கான புதிய ஒரு பார்வையை உருவாக்குவோம்!

இலங்கையர்களே, எழுந்திடுங்கள்! நவகாலனித்துவத்தின் இரண்டாவது அலையிலிருந்து இலங்கையை காப்பாற்றுவோம்!

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையில் நிகழ்ந்துவரும் சர்வதேச ஏகாதிபத்தியக் கடன் பிடியிலிருந்து நம்மை விடுவிப்போம்!

நவதாராளவாதப் பாதையை நிராகரிப்போம். நவதாராளவாதத்திற்கு மாற்றுவழியை உருவாக்குவோம்!

முதலில் நிர்வாணமான இராணுவ காலனித்துவமும், பின்னர் காலனித்துவத்திற்குப் பிந்தைய கலாச்சார ஏகாதிபத்தியமும் உருவானது.

இன்று, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியவற்றின் தலைமையில், அமெரிக்க, பிரித்தானிய, ஜப்பானிய, மற்றும் ஐரோப்பிய (EU) சர்வதேச நிதி ஏகாதிபத்தியவாதிகள் ஆதரவில் நடக்கின்ற கடன் நெருக்கடியின் ஊடாக எம்மை அடிமைப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளிலிருந்து விடுதலை செய்ய இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்க நாம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம்.

நமது நாட்டின் குடிமக்களுக்கு அல்லாமல், உலகலாவிய வடக்கு பகுதிகளில் உள்ள அவர்களது எஜமான்களுக்கே சேவை செய்யும் நமது சொந்தப் பழுப்பு நிறச் சாகீப்களின் கம்ப்ராடார் வர்க்கத்திலிருந்து நம்மை விடுவிக்க ஒருங்கிணைந்து போராட்டத்தைத் தொடங்குவோம்!

ரணில், ராஜபக்ச, நந்தலால், மஹிந்த சிறிவர்தன, ஹர்ஷ, எரான், ஷாந்தா தேவராஜன், இந்திரஜித் கூமாரசுவாமி, ஷாமினி கூரே, ஷெஹான், காஞ்சனா, ரஞ்சித், மற்றும் பிறர் ஆகியோர் அடங்கிய நவதாராளவாத கும்பலால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட கடன்பிடி உடன்படிக்கைகளிலிருந்து நம்மை விடுவிப்போம்!

IMF, உலக வங்கி, மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை உட்பட அனைத்து கொள்ளையடிக்கும், காலனித்துவ, சர்வதேச கடன் வட்டிக் காரர்களின் நவதாராளவாத நிபந்தனைகளிலிருந்தும் மற்றும் அதிஉச்சவட்டி விகிதங்களிலிருந்தும் நம்மை விடுவிப்போம்!

சர்வதேச சமூகம் சர்வதேச இறைமை முறிக் கடன்களை ரத்துச் செய்ய அழுத்தம் கொடுப்போம்!

தேவையான இடங்களில், மிகுதிக் கடனை திரும்பச் செலுத்த எங்கள் சொந்தத் திட்டங்களை அமுல்ப்படுத்துவோம்!

மத்திய வங்கியை மீண்டும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறக்கூடிய சட்டதிருத்தங்களை உடனே அறிமுகப்படுத்து!

உள் நாட்டுக் கடன் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியத்தின் சலுகைகளை குறைப்பதை உடனே ரத்துச் செய்!

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு மசோதா, நுண்நிதிக் கடன் மசோதா, மற்றும் மீன்பிடித் துறை மசோதாவை உடனடியாக நிராகரிக்கவும்! அடக்குமுறையான ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தையும், புதிய மறுசீரமைப்புச் சட்டத்தையும் ரத்துச் செய்!

சுருக்கம்

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியலில் இடதுசாரி இயக்கத்தின் பங்கு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது மற்றும் அமைப்புரீதியான மாற்றத்தை வலியுறுத்துவது இடதுசாரிகளின் அவசரப் பொறுப்பு ஆகும். இதுவரை மக்களின் நலன்களுக்குப் பதிலாக வெளிநாட்டு நலன்களுக்கு முன்னுரிமை வழங்கி சட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுத்து பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பெரிதாக்கிய ஆட்சி பிரமுகர்களை விமர்சிக்கிறது. 1977 முதல், நவதாராளவாத கொள்கைகள் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் ஆதிக்கம், மக்களுக்கு விரோதமான சட்டங்களை உருவாக்குவதற்கும் அரசியல் செயற்பாடுகளை அடக்குவதற்கும் வழிவகுத்துள்ளது.

அரசியல் சீர்திருத்தம் மட்டும் போதுமானதல்ல. ஒருசமத்துவமான, சோசலிச சமூகம் ஒன்றிற்கான மாற்றுப்பார்வை அவசியமாகும். இது நவதாராளவாதத்தை மற்றும் அதனை ஆதரிக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை கலைப்பதற்கான மாபெரும் ஒன்றுதிரட்டளை உருவாக்குவதையும் உள்ளடக்கியுள்ளது. இந்தக் கட்டுரை உலகளாவிய மட்டத்தில்நவதாராளவாதத்தின் தோல்வியை வெளிப்படுத்துகின்றது. மேலும் சிலி போன்ற நாடுகள் எவ்வாறுசோசலிசம் நோக்கிச் செல்கின்றன என்பதையும், மக்களால் வழிநடத்தப்படும் தொடர்ச்சியான இயக்கங்களின் மூலம் இலங்கையும்அதே பாதையைப் பின்பற்ற முடியும் என்பதையும் பரிந்துரைக்கின்றது. நமது இலக்கு மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதாகும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியும் நவதாராளவாதமும் 

மக்கு அமைப்பு ரீதியான மாற்றம் தேவை

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது நவதாராளவாத பொருளாதார கொள்கைகள் ஆகும்.

வரலாற்றுப் பின்னணி: சுதந்திரத்திற்குப் பின்பு, குறிப்பாக 1977 முதல், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்றவற்றால் பரிந்துரைக்கப்பட்ட சார்ந்த முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி மாதிரியை இலங்கை பின்பற்றியது. இந்த மாதிரி சுயாதீனமான பொருளாதார வளர்ச்சிக்குப் பதிலாக கடன் பெறுவதை முன்னுரிமைப்படுத்தியது. இதனால் வர்த்தகப் பற்றாக்குறையும்வெளிநாட்டுக்  கடனில் மிகுந்தளவு சார்ந்துள்ளதும் விளைவுகளாகும்.

நவதாராளவாதத்தின் தாக்கம்: நவதாராளவாத கொள்கைகள் உள்ளூர் விவசாயத் துறையை புறக்கணித்து, சமூக நலனைக் குறைத்து, பொருளாதார ஏற்றத்தாழ்வை ஊக்குவித்தது. உயர்வட்டி விகிதத்தில் கடன் பெறுதல் மற்றும் நேரடி வரிகளைக் குறைத்தல் நிலையை மோசமாக்கி, அதிகரித்த மறைமுக வரிகளுக்கும் வீட்டுக் கடன் அதிகரிப்புக்கும் வழிவகுத்தது.

IMFன் பங்கு: கடன் மறுசீரமைப்பிற்காக அரசு IMFஇடம் திரும்பியதால், பொதுமக்கள் மீது சுமைகளைப் பெருக்குவதற்கான நிச்சயக்குறிப்புகள் ஏற்படுத்தப்பட்டன. உதாரணமாக, VAT வரி அதிகரிப்பு, பணமதிப்பு நீக்கம் மற்றும் வட்டி வீத அதிகரிப்பு. இது முதலீடுகளையும் வேலை வாய்ப்பையும் முடக்கியதுடன், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பில் அரசின் செலவுகளைத் குறைத்தது.

பொருளாதார சார்பு: சர்வதேச நிதிநிறுவனங்கள் வழிநடத்தும் பொருளாதாரக் கொள்கைகளால்இலங்கை சார்புநிலைக்கு ஆழமாக தள்ளப்பட்டுள்ளது. இது சர்வதேச நிதி முதலாளித்துவத்தில் இணைந்துள்ள நகரமயமான நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் அதே நேரத்தில் பெரும்பான்மையான மக்களைக் புறக்கணிக்கின்றது.

அரசியல் நெருக்கடி: ஆட்சிப் பிரமுகர்களின் நியாயத்தன்மை குலைந்து, அரசியல் அமைப்பின் மீதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும் பொது நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களின் துன்பத்திற்கு பதிலளிக்க இயலாத ஒரு உயரடுக்கு சிவில் சமூகத்தால் ஆதரிக்கப்படும் அரசு, கட்டுப்பாட்டைப் பேணக் கடுமையான அடக்குமுறையை நம்பியுள்ளது.

சமூகத் தாக்கம்: நவதாராளவாதம் சுயநலத்தை வளர்க்கின்றது மற்றும் பரிவு இல்லாத தன்மையை வளர்க்கின்றது, மற்றும் சமூக உணர்ச்சிகளை மறைத்து அசமத்துவத்தை அதிகரிக்கின்றது. தற்போதைய பாதை கல்வியை முடக்கி, சமூக அழிவை அதிகரித்து ஒரு தலைமுறையைப் பலியிடுகின்றது.

அமைப்பு ரீதியான மாற்றம் தேவை: உண்மையான அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கான மாற்றுப்பார்வையும் அமைப்பு ரீதியான மாற்றமும் அவசியமாகும். இது நவதாராளவாதத்தினை நிராகரிப்பதையும் மேலும் சமத்துவம், சுயாதீனத்தன்மை மற்றும் கூட்டு நலனை மையமாகக் கொண்ட புதிய வளர்ச்சி மாதிரியை உருவாக்குவதையும் உள்ளடக்கியது.

மொத்தத்தில், எங்கள் வாதம் நவதாராளவாத கொள்கைகளிலிருந்து விலகி எல்லா குடிமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் சமத்துவமான மற்றும் சுயமான பொருளாதார அமைப்பை நோக்கி நகர வேண்டும் என்பதே ஆகும். 

சமூக நெருக்கடி மோசமாகின்றது

போஷாக்கின்மை: பல குடும்பங்கள் தினமும் ஒரு முறை உணவை உண்கின்றனர், குழந்தைகள் போஷாக்கின்மை மற்றும் உணவுப்  பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர். 2022 ஆம் ஆண்டில், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 42.9% போஷாக்கு குறைநிலையில் இருந்தனர், மேலும் 2023 மார்ச் மாதத்திற்குள், 6 முதல் 59 மாத வயதுள்ள குழந்தைகளில் 19.8% கடுமையான போஷாக்கு குறைநிலையால் பாதிக்கப்பட்டனர்.

வறுமை நிவாரணம்: உலக வங்கி பணவீக்கத்தையும் உயர்ந்த விலைகளையும் எதிர்க்க நிதி உதவியை பரிந்துரைக்கிறது. ஆனால், இதனால் பொருள் ரீதியான உதவி குறைக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை மிகவும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கவில்லை, பல வறுமை மற்றும் தற்காலிக வேலைகள் செய்யும் தொழிலாளர்களை உதவித் திட்டங்களில் இருந்து விலக்கிவிட்டது. உலக வங்கி விதிப்படி, வறுமை நிவாரணத் திட்டத்திற்கு உள்நாட்டு உற்பத்தித் தொகையின் (GDP) வெறும் 0.6% மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தாக்கம்: 2023ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, 60.5% குடும்பங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக வருமானம் குறைந்தும் செலவுகள் அதிகரித்துமுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் கல்விச் செலவுகள் முக்கியமாக அதிகரித்துள்ளன. வேலை செய்யும் நபர்களில் கிட்டத்தட்ட அரைவாசியினர் நெருக்கடி காரணமாக வேலை மாற்றம், வேலை நீக்கம், வேலை நேரக் குறைப்பு அல்லது சம்பளம் குறைப்பு ஆகியவையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் கடன்: ஆடைத் தொழிற்துறையில் வேலை செய்யும் பெண்கள் வேலை நேரம் குறைவதால் குறைந்த வருமானத்தை சந்திக்கின்றனர். பல நகர மற்றும் வறிய சமூகங்கள் கொவிட்-19 பெருந்தொற்றால் ஊரடங்கு முதல் நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணம் மற்றும் பிற கடன்களை செலுத்துவதற்கு போராடுகின்றனர். செலுத்தாததன் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட மில்லியன் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

சுகாதார அணுகல்: வேலை இழப்பு அல்லது குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதில் சிரமமாகவுள்ளது. 35.1% நோயாளிகள் தமது சிகிச்சை இடத்தை மாற்றியுள்ளனர், மேலும் 33.9% ஆனவர்கள் நிலைமை மோசமான பிறகு மட்டுமே சிகிச்சையை நாடியுள்ளனர்.

கல்வி நெருக்கடி: மார்ச் 2022 முதல், இலங்கையில் 54.9% மாணவர்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர், 12 மற்றும் 13 வயதுடைய மாணவர்களில் பள்ளி விலகல்கள் அதிகரித்துள்ளன.

கோரிக்கைகள்

நாங்கள் கோருபவை:

எமது ஜனநாயக வாக்குரிமைகள்!

உணவு உதவி!

வீட்டு உதவி மற்றும் மின்சாரம்!

சமைப்பதற்கு எரிபொருள்!

மின்சார கட்டணங்கள் உடனடியாக குறைத்தல்!

நீர்க் கட்டணங்கள் உடனடியாக குறைத்தல்!

பள்ளி மாணவர்களுக்கு ஒரு வேளைஉணவை உடனடியாக வழங்குதல்!

பஸ் கட்டணங்களை குறைத்தல்! பள்ளி குழந்தைகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு இலவசப் போக்குவரத்து உரிமைகள்! வேலைக்குச் செல்லும் மக்களுக்கு மலிவான போக்குவரத்து உரிமைகள்!

செல்வ வரிகளை விதித்தல்!

நாட்டுக்கடன்களை அடைக்க சமூகநலனுக்கான அரசப் பணத்தைப் பயன்படுத்தக்கூடாது; பதிலாக, கடன்கள் ரத்துச் செய்தல்!

கல்வி, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை தக்கவைக்கஉலகளாவிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நிறுவுதல்!

இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்வியை மீண்டும் நிறுவுதல்!

உணவு பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளூர் உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அரசுமுதலீடு செய்தல்!

மீண்டும் இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்வியை நிறுவுதல்!

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளூர் உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முதலீடு செய்யுதல்!தற்போதைய நெருக்கடிக்கான தீர்வுகள் சார்ந்த முன்மொழிவுகள்

தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் உடனடியான, குறுகிய, மற்றும் நடுத்தர முதல் நீண்டகால நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான திட்டத்தை முன்வைக்கின்றது. இது அரசாங்கம் மற்றும் சமூகத்திற்கிடையே ஒற்றுமையை வலியுறுத்தி, மக்களுக்காக முதலீடு செய்வதையும், அரசின் தலையீடை மையமாகக் கொண்ட புதிய பொருளாதார மாதிரியை வலியுறுத்துகின்றது. உடனடி நடவடிக்கைகளில் சமூக செலவுகளை குறைப்பதை நிறுத்துவது, உடனடி நிவாரணத்தை வழங்குவது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது, மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பாதுகாப்பது என்பன அடங்கும். இந்த முன்மொழிவு பிற்போக்கான வரிகளைக் கழிப்பது மற்றும் செல்வ வரிகளை விதிப்பது போன்ற வரி சீர்திருத்தங்களை கோருகின்றது.

மேலும், சுகாதாரம், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து வழங்கப்படும் நிவாரணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. நடுத்தரகால நடவடிக்கைகள் உணவு உற்பத்தியில் சுயமான தன்மையை அடைவதையும் உள்ளூர் தொழில்களை ஆதரிப்பதையும் வலியுறுத்துவதோடு, நீண்டகால நடவடிக்கைகள் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதையும் விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறுகியகால இலக்குகள்:

அத்தியாவசிய பொருட்களை (உணவு, மருந்து, எரிபொருள், வாயு) முன்னுரிமை கொடுத்து, இறக்குமதிகளை முறையாக நிர்வகிப்பதன் மூலம் உணவு மற்றும் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதி செய்தல்.

குறைந்த செலவு உள்ளீடுகளைக் கொண்ட விவசாயத்தை நோக்கிய மாற்றம்.

உள்ளூர் விவசாயம் மற்றும் கைத்தொழில்களுக்கு தேவையான இடைநிலை உள்ளீடுகளை வழங்கி உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளித்தல்.

நடுத்தரகால இலக்குகள்:

பாலின சமத்துவம்: பாலின சமத்துவத்திற்கான சட்டங்களை நிறைவேற்றுதல்மற்றும்பொருளாதார நெருக்கடியின் போது வீட்டு வன்முறையை எதிர்கொள்ளுதல்.

கிராமப்புர பகுதிகளைப் புதுப்பித்தல்: விவசாயம், பாற்பொருள் உற்பத்தி மற்றும் மீன்பிடி மூலம் உணவில் தன்னிறைவை நோக்கமாகக் கொண்ட, நீண்டகால வளர்ச்சிக்கான நிலையான விவசாய மற்றும் மீன்பிடித் தொழில்களை மேம்படுத்துதல்.

விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகள்: விவசாய மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு இலவச அல்லது மானிய அடிப்படையில் உள்ளீடுகளை வழங்குதல். இலங்கையின் கடல்சார் நீர்நிலைகளில் வெளிநாட்டு மீன்பிடியைத் தடைசெய்து உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு கூட்டுறவு ஆதரவை அமைத்தல்.

விவசாய நிலச் சீர்திருத்தம்: குடிமக்களுக்கு அதிகமான சுமையை ஏற்படுத்தும் மற்றும் பெரிய நிறுவனங்கள் நிலத்தை கைப்பற்றும் அபாயங்களை எதிர்கொள்ளுதல். உணவுப் பாதுகாப்பைமேலும் மோசமாக்கும் சிறு விவசாயிகள் தமதுநிலத்தை இழப்பதைத் தவிர்த்தல். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நிலச் சீர்திருத்தம்: இடம்பெயர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயம் மற்றும் வீடமைப்புக்கான நில உரிமைகளை வழங்க நில சீர்திருத்தங்களைச் செயற்படுத்தல். சுயாதீன வீடுகளை அமைக்கவும், சுயாதீன உற்பத்தியாளர்களாக அவர்களை உருவாக்க ஆதரித்தல்.

விலங்குகள் நலன் மற்றும் காட்டுப் பராமரிப்பு: விலங்குகள் நலன் சட்டங்களை அமுல்ப்படுத்தவும், காட்டுப் பகுதிகளுக்கான பாதுகாப்புக்களை மீண்டும் உருவாக்குதல்.

கல்வி: இலவசக் கல்வியைப் பாதுகாத்து, பள்ளிக்கூட வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை அணுக உறுதி செய்யுதல். தகுதிவாய்ந்த நபர்களுக்கு அரச பல்கலைக்கழகங்களில் இடங்களை வழங்குவதோடு, கல்விக்கு அரச – வரவு செலவுத் திட்டத்தில் 6% ஒதுக்கீடு செய்யுதல். கல்வித் தரத்தை மேம்படுத்த அரசின் தலையீட்டை வலுப்படுத்துதல்

அரசப் பல்கலைக்கழக அமைப்பின் சீர்குலைவைத் தடுத்தல், மாணவர்களின் கடனை அதிகரிப்பதை தவிர்த்தல், கல்விக்கான போதிய வளங்களை உறுதி செய்தல்.

நீண்டகால பொருளாதார மாற்றம்

நடவடிக்கைகள்: இலங்கை தற்போதைய பொருளாதார கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போது வெளிப்புற அதிர்வுகளுக்கு மிகத்தீவிரமாக பாதிக்கப்படக்கூடிய ஆடை உற்பத்தி மற்றும் சுற்றுலா தொழில்துறைகளின் மீதிலேயே நம்பிக்கையை வைத்துள்ளது. 

விவசாயம் மற்றும் உள்ளூர் கைத்தொழில்களை மையப்படுத்தல்: உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு விவசாயம்  சார்ந்த தொழில்களை மேம்படுத்துவதும் உள்ளூர் தொழில்களை மேம்படுத்துவதும் மிகவும் முக்கியம்.

இறக்குமதி மாற்றீடு: இறக்குமதி மாற்றீடிற்கான முக்கிய துறைகளை அடையாளம் கண்டு, குறைந்த வட்டி விகித கடன்கள் மற்றும் தேவையான அரசாங்க ஆதரவை உறுதி செய்தல்.

சூழலிய விவசாயம்:1960களில் உருவான பசுமைப் புரட்சி நடைமுறைகளிலிருந்து அகன்று, விவசாய நெருக்கடியை தீர்க்க இயற்கைப் பாதுகாப்பான மற்றும் கூட்டுறவு வலையமைப்பை நோக்கிச் செல்லுதல்.

சுயாதீன பொருளாதார பாதை

தன்னிறைவு: நவதாராளவாதக் கொள்கைகளை விட்டு விலகி பொருளாதார தன்னிறைவை நோக்கி நகருதல்.

உடனடி நிவாரணத் திட்டங்கள்: உழைக்கும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக வருமான மீழ்பங்கீட்டிலும், பொது விநியோக அமைப்புகளிலும் கவனம் செலுத்தும் உடனடி நிவாரண திட்டங்களை அமுல்ப்படுத்துதல்.

உள்ளூர் உற்பத்தியாளர்களில் முதலீடு: உள்ளூர் சேமிப்புகளை உருவாக்கவும் ஏற்றுமதித் தொழில்களில் முதலீடுகளை வலுப்படுத்தவும் அபிவிருத்தி வங்கிப் பிணைப்புகளை ஊக்குவித்தல்.

இறக்குமதிகளைத் தந்திரோபாயமாக முன்னுரிமைப்படுத்தல்: வர்த்தக உறவுகளின் தன்மையை நுணுக்கமாக ஆய்வு செய்து, உள்ளூர் உற்பத்தியை ஆதரிக்க அத்தியாவசியமான இடைநிலைப் பொருட்களின் இறக்குமதிக்கு முன்னுரிமை அளித்தல்.

மறுசீரமைக்கப்பட்ட சேமிப்புக்கள் மற்றும் முதலீடுகள்: வெளிநாட்டுச் சந்தை சார்ந்து கவனம் செலுத்தாமல் உழைக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை தீர்க்க பயனுள்ள முதலீடுகளை ஊக்குவித்தல்.

அரசியல் சீர்திருத்தங்கள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை நீக்குதல்: அதிகாரதாரியான ஆட்சியை நடத்துவதற்கு வழிவகுத்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியின் மிகுதியான அதிகாரங்களை நீக்குதல்.

யாப்புச் சீர்திருத்தம்: மக்களின் பல ஆண்டுகளின் கோரிக்கையை பிரதிபலிக்கும் உண்மையான குடிமக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தும் புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துதல்.

உள்ளூர் முதல் தேசிய பிரதிநிதித்துவம்: உள்ளூர் முதல் தேசியம் வரை எல்லா ஆட்சி நிலைகளிலும் நேரடியாக குடிமக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் பல்நிலைத் தேர்தல் முறைமையை உருவாக்குதல்.

மீளழைக்கும்அதிகாரம் மற்றும்சிறிய தொகுதிகள்: தேர்தல் பிரதிநிதிகள் மீளழைக்கப்படக் கூடிய மற்றும் ஆழமான தொடர்புகளையும் பொறுப்புக்கூறும் தன்மையையும் அதிகரிக்கக் கூடிய சிறிய தொகுதிகளை உறுதி செய்தல். 

உள்ளடக்கிய தேசிய சபை: பலவகையான சமூகக் குழுக்களையும் தொழில்முறையினரையும் உள்ளடக்கிய, குறைந்தபட்சம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் ஒரு தேசிய சபையை உருவாக்குதல்.

நிர்வாகப் பரவலாக்கம்: மையத்தில் இருந்து உள்ளூர் நிலைகளுக்கு அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பகிர்ந்தளித்து, அரசியல் நடவடிக்கைகளில் குடிமக்களின் நேரடி பங்கேற்பை உறுதி செய்தல்.

குடிமக்கள் பங்கேற்பு

புரட்சிகரமான சமூக மாற்றம்: நாட்டின் அரசியல் செயல்முறைகளில் குடிமக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் அத்தகைய ஒரு அரசியல் அமைப்பை ஏற்படுத்த புரட்சிகரமான சமூக வளர்ச்சியின் தேவையை வலியுறுத்துதல்.

நவதாராளவாத சிந்தனையும் நாகரிகம் / பண்பாட்டு நெருக்கடியும்

நவதாராளவாத சிந்தனை என்பது வெறும் பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல, இது சமூக மற்றும் அரசியல் அமைப்புக்களை வடிவமைக்கும் ஒரு நெறிமுறை அமைப்பாகவும் உள்ளது. இது தனிமனித, போட்டி, பொருள்மையவாதத்தை வலியுறுத்துகின்றது. பெரும்பாலும் கூட்டுறவினை, சமூக நலனை மற்றும் ஆன்மீகத்தை இழிவாகக் காண்கிறது.

நெறிமுறை அமைப்பாக நவதாராளவாதம்: இது ஒரு பொருளாதாரக் கோட்பாடு மட்டுமல்ல; இது சமூகத்தையும், நம்மையும் பற்றிய புரிதலைக் கலைக்கிறது, கல்வி முதல் சுகாதாரத்திற்கு உட்பட்ட அனைத்து சமூகத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நவதாராளவாதத்தின் கீழ் மனித அடையாளம்: மனிதர்கள் தனிப்பட்ட லாபத்தை நோக்கி போட்டிபோடும் உயிரினங்களாகக் காணப்படுகின்றார்கள், இது ஒட்டுமொத்த சமூகத்திற்கும்நன்மையளிக்கிறது என்ற கருத்தினை முன்வைக்கின்றது.

பொருளாதார எழிமைப்படுத்தல்: நவதாராளவாதம் அனைத்து மனித நடவடிக்கைகளையும் பொருளாதார அளவுகோல்களாக மாற்றி, போட்டியையும் இலாபநோக்கையும் வலியுறுத்துகின்றது.

தொழில்முனைவோர்களாக மனிதஅகநிலை: மனிதர்களை தங்களின் சந்தை மதிப்பை மேம்படுத்துவதற்கு தங்களில் முதலீடு செய்கின்ற தொழில்முனைவோர்களாகநோக்குதல்

நவதாராளவாதமும் ஜனநாயகமும்: இது சந்தை மதிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து, கூட்டாக முடிவெடுப்பதைக் குறைக்கவும், பாரம்பரிய ஜனநாயக நடைமுறைகளையும் நிறுவனங்களையும் பலவீனப்படுத்தவும் செய்கிறது.

இலங்கையில் தாக்கம்: நவதாராளவாத மனநிலை பரவலாகக் காணப்படுகிறது, கூட்டுறவுத் ததும்புகளை அச்சுறுத்துகிறது. குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்தில், இலங்கை அரசு தனிப்பட்ட நபர்களை சந்தையின் அருளுக்கே விட்டுவிட்டது.

சமூகப் பயன்கள்: நவதாராளவாத விழுமியங்கள் சுயநலத்தை ஊக்குவித்து, பொது நலனைக் குறைத்து, முக்கியமான சமூக இடைவெளிகளை உருவாக்குகின்றன மற்றும் சமூகப் பாதுகாப்பு வலைகளைப் பாதிக்கின்றன.

நவதாராளவாத விழுமியங்கள் மற்றும் பண்பாட்டு நெருக்கடி: தனிப்பட்ட நலன், போட்டி மற்றும் பொருளாதாரம் ஆகியவை கூட்டுறவுக் கணிப்புகளைச் சிதறடித்து, பண்பாட்டு நெருக்கடியை உருவாக்குகின்றன.

நவதாராளவாத கனவுகளின் வீழ்ச்சி: 2008இல் உலக நிதி நெருக்கடியும், 2022இல் இலங்கைக் கடன் தவிர்ப்பும் பலருக்கு, குறிப்பாக போராட்டங்களில் ஈடுபட்ட இளம் தலைமுறைக்கு நவதாராளவாத கனவின் வீழ்ச்சியை குறிக்கின்றன.

கூட்டாக உணர்தல்: ஒருவரும் தனிமையில் சிறந்து விளங்க முடியாது என்ற புரிதல் அதிகரித்து வருகிறது, மற்றும் சமூக நலனுக்கான கூட்டுறவு முயற்சி மற்றும் பரஸ்பர ஆதரவு தேவைப்  படுகின்றது.

மொத்தத்தில், இந்த உரை நவதாராளவதத்தின் ஆழமான தாக்கத்தை பண்பாடு, விழுமியங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மீதான தாக்கத்தை விமர்சிக்கின்றது, கூட்டு விழுமியங்கள் மற்றும் கூட்டுறவு நலனைக் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றது.

இலங்கை மிகக்கடுமையான கலாச்சார மற்றும் நாகரிகப் பிரச்சினையை எதிர்கொள்கின்றது. இது சுதந்திரத்திற்குப் பிறகு ஆழமான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக சிக்கல்களால் குறிக்கப்படுகின்றது. இந்த நெருக்கடி கொவிட்-19 பெருந்தொற்றுநோயின்போது குறிப்பாக தெளிவாக விளங்கும் வகையில், பாரம்பரிய சமூக வாழ்க்கை மற்றும் விழுமியங்களை விரைவாக அழித்து, உயரடுக்குகளுக்கும் ஏழைகளுக்கும் இடையில் வெளிப்படையான வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடி நவதாராளவாத கொள்கைகளின் மற்றும் அதிகாரமிக்க ஆட்சியாளர்களின் பரந்தளவிலான தோல்விகளை பிரதிபலிக்கின்றது. இது அரசியல் எதிர்ப்பை மட்டுமன்றி அறம் சார்ந்த மற்றும் அமைப்பு ரீதியான மாற்றத்தையும் வேண்டி நிற்கின்றது. புதிய தலைமுறையினரிடையே நிலைத்திருக்கும் நடைமுறையியல் நிலைப்பாடு தற்போதைய நிலைமையைக் கேள்விக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக, பெரும்பாலும் ஏற்றுக்கொள்கின்றது. தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு பொது பொறுப்புணர்வை வளர்க்க புதிய விழுமியங்கள் மற்றும் புதிய கருத்தோட்டங்கள் தேவையாகவுள்ளது.

வரலாற்று ரீதியாக, இலங்கை சமூகத்தில் இரக்கம் மற்றும் பொதுநலம் போன்ற பாராட்டத்தக்க விழுமியங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. எனினும், இது படிப்படியாகசுயநலவாதம் மற்றும் நுகர்வோட்டத்தால் இயக்கப்படுவதாக மாறிவிட்டது. இந்த உரை பாரம்பரிய விழுமியங்களான ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் வலுவிழந்துள்ளவர்களுக்கு ஆதரவு ஆகியவற்றை  மறுபடியும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நிலவும் சவால்களை எதிர்கொண்டு ஒரு நல்ல எதிர்காலத்திற்கான வழியைக் காட்டுகின்றது.

Leave a comment