பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமமான நாம் மன்னாரின் பறவைகள், நிலம் மற்றும் மக்களின் அழுகுரல்களைச் செவிமடுக்கின்றோம். மன்னாரில் அமைதியான விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது 2025 செப்டம்பர் 26ஆம் திகதி இரவு நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலுடன் இந்த அரசாங்கத்தின் இருண்ட நாட்களில் ஒன்று கடந்துவிட்டிருக்கின்றது. இதன் விளைவாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்படி நேரிட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தின் மக்கள் பல ஆண்டுகளாக தமது பலவீனமான சுற்றுச்சூழல்…
