Tagged உதவி வழங்குதல் நியாயத்தன்மை

Featured

அனர்த்த முன்னாயத்தம், நியாயமான நிவாரணம் மற்றும் பொருளாதார நீதி: விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டுள்ள சமூகங்களை முன்னுரிமைப்படுத்த பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமம் கோரிக்கை

சூறாவளிப் புயல் டிட்வா இலங்கையினை நெருங்கி, நிலைகொண்டு கரையைக் கடந்ததால், பல நாட்களாக இடைவிடாத மழையும் காற்றும் தீவை சேதமாக்கியுள்ளது. இதனை எழுதும் நேரத்தில், 355 பேர் உயிரிழந்துள்ளதுடன் 366 பேர் காணாமல் போயுள்ளனர் என்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட 15000-25000 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 44,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். நிலச்சரிவுகளுக்குள்ளாகும் பகுதிகளில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு நலிவுற்ற தொழிலாளர் வர்க்க, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளான பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும்…